முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக ஆஸி வீரர் மார்ஷ்: ஐ.பி.எல். புனே அணியில் இருந்து விலகினார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்சேல் மார்ஷ் ஐ.பி.எல். புனே அணியில் இருந்து விலகினார்.  

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட் அணியில் உள்ளஆஸ்திரேலிய அணி வீரர் மிட்சேல் மார்ஷ் காயம் காரணமாக அவதிப்படுகிறார்.  இதனால் அவர் ஐ.பி.எல்.லின் இதர ஆட்டங்களில் இருந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் தனது அணியில் இருந்தும் விலகினார்.

புனே அணியில் ஏற்கனவே காயம் காரணமாக கெவின் பீட்டர்சன், பாப் டு பிளசிஸ் ஆகிய வீரர்கள் விலகி இருக்கிறார்கள் . இந்த நிலையில் தற்போது மார்ஷ்சும் விலகி இருக்கிறார். இதனால் புனே அணி மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.  மார்ஷ்சின் இடது வயிற்றுப்பகுதியில் கடுமையான வலி  காணப்பட்டது. இதனால் அவர் அடுத்து வரும் ஐ.பி.எல்.போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

காயம் குறித்து ஸ்கேன் செய்த மார்ஷ் அவசரமாக தனது நாட்டிற்கு திரும்பினார். அவர் அங்கு தீவிர சிகிச்சை எடுக்கிறார். அந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் மேற்கு இந்திய தீவு செல்லும் அணியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago