முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ், பாரதிய ஜனதா கரங்கள் கறை படிந்தவை: ஆம் ஆத்மி கட்சி சரமாரி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இருவரது கைகளுமே கறைபடிந்தவைதான். ஊழலை ஒழிப்பேன் என்று பாஜக சூளுரைத்தது உண்மையானால் இதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது.

முன்னாள் விமானப்படை தலைவர் எஸ்.பி.தியாகி இது குறித்து குற்றம்சாட்டும்போது டெல்லியில் செயல்படும் சிந்தனை அமைப்பான விவேகானந்தா அறக்கட்டளையை குறிப்பிட்டுள்ளார். இதன் தலைவராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்திருக்கிறார் என்றும் கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி இதனால்தானோ என்னவோ பாஜக விசாரணையை மந்தப்படுத்தியுள்ளது என்று ஐயம் எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் தொடங்கப்பட்டது. மன்மோகன் சிங் அரசு இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்தது மற்றும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எனவே காங்கிரஸ், பாஜக இருவரது கைகளுமே கறை படிந்துள்ளது போல் தெரிகிறது. இதனால்தான் சோனியா காந்தி மீது மோடி அரசு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மோடி அரசின் நோக்கங்கள் ஊழலை ஒழிப்பதாக இருக்குமேயானால், இதில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும். சோனியா காந்தி, அகமட் படேல் முதல் எஸ்.பி.தியாகி, மற்றும் பிற அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். இதில் சில பத்திரிகையாளர்களும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்