முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் காஸ் : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

பாலியா  - நாடு முழுவதும் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.  வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 5 கோடி குடும்பங்களுக்கு ரூ.8000 கோடி மதிப்பில் இலவசமாக சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தொழிலாளர்கள் தினமான நேற்றுமுன்தினம் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் நடந்த விழாவில் சில பயனாளிகளுக்கு இலவச சமையல் காஸ் இணைப்புக்கான சான்றுகளை அவர் வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:- இந்த நாளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால அரசுகள் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தின. ஏழைகள் முன்னேறினால்தான் வறுமை ஒழியும். அதன்படி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, சுத்தமான குடிநீர், மின் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். வறுமைக்கு எதிராக மத்திய அரசு போரிட்டு வருகிறது.

இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏழை தாய்மார்களின் நலன் கருதி நாடு முழுவதும் ரூ.8000 கோடி மதிப்பில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் காஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். அதன்படி முதல் ஆண்டில் 1.5 கோடி குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களுக்கும் காஸ் இணைப்பு கொடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்