முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விளக்க முடிவு: ஆதரவாளர்கள் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 2 மே 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் உள்ள தலைவர்களுக்கு இதற்கு முன்பு விடுதலைபுலிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் அவர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள்  ஆகியோர்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் இல்லாததால் அனைவருக்கும் ராணுவ பாதுகாப்பை விலக்கி விட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பத இருக்கிறது. இன்றுடன் இந்த பாதுகாப்பை விலக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு ராஜபக்சே தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக அவரது ஆதரவு எம்.பி. பந்துலகுணவர்த்தனே கூறியதாவது:-

ராஜபக்சே உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. தமிழ் போராளிகளால் அவருடைய உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என கருதுகிறோம். எனவே ராஜபக்சேவுக்கு தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு எந்த வகை பாதுகாப்பு கொடுத்தாலும் ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்புதான் சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்