முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கிரிக்கெட் சங்கங்கள் லோதா கமிட்டி பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 2 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  -  மாநில கிரிக்கெட் சங்கங்கள் லோதா கமிட்டி பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
 இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்களும் இந்திய கிரிக்கெட் வாரியமும் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங், மற்றும் ஸ்பாட் பிக்சிங் ஊழல்கள் நடப்பதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் இந்திய கிரிக் கெட் வாரியத்தில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டது. இந்த சீரமைப்புகளை மேற்கொள்வதில் எந்த வித குறைபாடும் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்திய கிரிக் கெட் வாரியத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைகளின் பேரில் இந்த சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.இந்திய கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து லோதா கமிட்டியை நாங்கள் நியமித்தோம். இந்த கமிட்டி தீவிரமான  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் தெரிவித்தார்.

 இந்த அமர்வாயத்தில் நீதிபதி எப்.எம். கலிபுல்லாவும் இடம்பெற்றிருந்தார். அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை வெறும் பரிந்துரைகளாக கருதக்கூடாது. அதனை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்என்றார்.  ஹரியானா கிரிக் கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், லோதா கமிட்டியின் பரிந்துரைகள் வெறும் பரிந்துரைகளாக உள்ளன.

அவற்றில் சிலவற்றை கிரிக்கெட் சங்கங்கள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என்றார்.  மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் வயது 70வயதுக்கு மேல் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஹரியானா கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கங்களில் கடைசி வரை நிர்வாகிகள் பதவியில் இருக்க வேண்டும் என்று கருதக்கூடாது. மற்றவர்கள் பதவி ஏற்க வழி விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வாயம் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்