முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் : பஞ்சாப் அணி வெற்றி

திங்கட்கிழமை, 2 மே 2016      விளையாட்டு
Image Unavailable

ராஜ்காட் : அக்சர் படேலின் அபார பந்து வீச்சால் குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜ்காட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஆட் டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி, கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அசுரத்தனமாக ஆடிய பஞ்சாப் அணி, குஜராத்தை வெற்றி கொண்டது.

நேற்றைய தினம் டாஸில் வென்ற குஜராத் அணியின் கேப் டன் ரெய்னா, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், ஸ்டோனிசும் களம் இறங்கினர். பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முரளி விஜய், அந்த பதவிக்கு தக்கபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளில் அவர் 55 ரன்களைக் குவித்தார். ஆனால் மறுபுறம் ஸ்டோனிஸ் (27 ரன்கள்), ஷான் மார்ஷ் (1 ரன்), மேக்ஸ்வெல் (0) குர்கீரத் சிங் (0) என்று முன்னணி வீரர்கள் பலரும் குறைந்த ரன்களில் அவுட் ஆக பஞ்சாப் அணியால் பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் சொதப்பலான பேட்டிங் காரணமாக தனது கேப்டன் பதவியை இழந்த டேவிட் மில்லர் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பொறுப்புடன் ஆடி பஞ்சாப்புக்கு கைகொடுத்தார். கடைசி கட்டத்தில் மில்லர் 31 ரன்களையும், சஹா 33 ரன்களையும் சேர்க்க, பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் குஜராத் அணியில் சிறப்பாக பந்துவீசிய கவுசிக் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வலிமையான பேட்டிங் வரிசை யைக் கொண்ட அணியான குஜ ராத், இந்த ஸ்கோரை ஊதித் தள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் திடீரென்று நிலமை மாறியது. மோகித் சர்மாவும், அக்சர் படேலும் ஆக்ரோஷமாக பந்துவீச, அதை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் பேட்டிங் வரிசை நிலைகுலைந்தது. முன்னணி பேட்ஸ்மேன்களான மெக்கல்லம் (1 ரன்), ரெய்னா (18 ரன்கள்), ஸ்மித் (15 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (2 ரன்கள்), பிராவோ (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, 39 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குஜராத்.

இந்த திடீர் சரிவில் இருந்து குஜராத் அணியால் மீண்டுவர முடியவில்லை. கடைசி கட்டத்தில் பாக்னர் 32 ரன்களை எடுத்தபோதும் அது குஜராத்தின் வெற்றிக்கு உதவவில்லை. 20 ஓவர்களில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுக்க, 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளரான அக்சர் படேல் ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்