முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவிலக்கு விஷயத்தில் கருணாநிதி பொய் நாடகம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      தமிழகம்
Image Unavailable

சோளிங்கர், மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி பொய் நாடகம் ஆடுகிறார் என்று அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

சோளிங்கரில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் சரவணனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

பாமகவின் தேர்தல் பிரச்சாரத்தை மற்ற கட்சிகள் காப்பி அடித்துப் பிரச்சாரம் செய்வதை மக்கள் கேலியாகப் பார்க்கின்றனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு ரோப் கார், மற்றும் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே லட்சியமாக கொண்டுள்ளேன். பாமக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற நிலை உருவாக்கப்படும். சோளிங்கரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும். மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து கருணாநிதி பொய் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். கருணாநிதிக்கு மது விலக்கு கொண்டு வருவதற்கு முழுமையான எண்ணம் இல்லை. அதனால்தான் திமுகவினருக்குச் சொந்தமான மது ஆலைகளை மூடாமல் மவுனம் காக்கின்றார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதியவர்களுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். வயதானவர்களைப் பாதுகாக்கும் அவர்களுக்கு ஆதரவான ஆட்சியாகவும் பாமக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியினர் மொத்தம் 10 தொகுதிகளில் கூட டெபாசிட் வாங்க முடியாது. என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்