முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் விமானப்படைத்தளம் தாக்குதலலை தடுக்க தவறிய அரசு மீது பாராளுமன்ற குழு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பஞ்சாப் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தடுக்க தவறிய அரசை  பாராளுமன்ற குழு கண்டித்தது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லைக்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த எல்லை வழியாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி ஊடுருவி பதன் கோட் விமானப்படை தளத்தை தாக்கினார்கள் அவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் உடையில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

அவர்கள் நமது ராணுவ வீரர்கள் என்று முதலில் நினைத்த விமானப்படைத்தள வீரர்கள் சில வினாடிகள் அமைதியாக இருந்தார்கள். நிலமையின்  தீவிரத்தை புரிந்து கொண்ட அந்த வீரர்கள் உடனடியாக பதிலடி தந்தார்கள். இந்த தாக்குதல் பல மணிநேரம் நீடித்தது. தீவிரவாதிகள் 6பேரும் கொல்லப்பட்டார்கள். அந்த தீவிரவாதிகள் சுட்டதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கத்தவறிய இந்திய அரசை பாராளுமன்ற நிலைக்குழு கடுமையாக கண்டித்தது. இந்த தாக்குதல் தீவிரமான தவறான விஷயம். நாட்டின் தீவிரவாத தடுப்பு அமைப்பு மற்றும் விமானப்படை தளத்தின் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்று பாராளுமன்ற குழு தெரிவித்தது. உள்துறை விவகாரம்  மீதான பாராளுமன்ற நிலைக்குழுவின்  197வது அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்  பதன் கோட்விமானப்படை தளத்தின் தாக்குதல் உண்மையிலேயே  தீவிரமான தவறான விஷயம் ஆகும். இந்த தாக்குதலின்போது, பஞ்சாப் போலீசாரின் பங்கு கேள்விக்குரியதாக இருக்கிறது. தீவிரவாதிகள் தாக்கும் விஷயத்தை முன் கூட்டியே எச்சரித்து இருக்க வேண்டும். ஆனால் பஞ்சாப் போலீசார் அதைப்பற்றி தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு துறை அமைப்பின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்று உளவுத்துறை தகவல் அளித்த போதும் பதன்கோட் விமானப்படை தள பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் முன்னேற்பாடுகளை மேற் கொள்ளவில்லை. விமானப்படை தளத்தின் பாதுகாப்பு உரிய முறையில் இல்லை.

அதன் எல்லைப்பகுதி மோசமான முறையிலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது.  விமானப்படை தளத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.இதன் மூலம் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருப்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுஇல்லாமல் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க முடியாது. ஆயுதம் ஏந்திய 4 நபர்கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து எளிதாக வர முடியாதுஎன்று பாராளுமன்ற குழுதெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்