முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி மாலுமிகள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டே இறுதி முடிவு எடுக்கும்: பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இத்தாலி மாலுமிகள் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டே இறுதி முடிவு எடுக்கும் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது சார்பில் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அவர் பேசியதாவது,

ஐ.நா.வின் சர்வதேச தீர்ப்பாயத்தில் இத்தாலிக்கு எதிரான வாதங்களை இந்தியா வலுவாக முன்வைத்துள்ளது. இந்திய நீதித் துறை விசாரணைக்கு தேவைப்படும்போது, மாலுமி சேல்வடோர் கிரோனை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைப்பது இத்தாலியின் கடமை என தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது. அதே வேளையில், கிரோன் ஜாமீனுக்கான நிபந்தனைகளை விதிப்பதில் உச்ச நீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. சர்வதேச தீர்ப்பாயத்தின் இந்த வழிகாட்டுதல் இந்தியாவின் வலுவான வாதத்தின் விளைவாக கிட்டியுள்ளது. மேலும் இதன் மூலம் இந்திய நீதித் துறையின் மாண்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜேட்லி விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் லோக் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த வழக்கை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டினர். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சி இத்தாலி மாலுமிகள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதாக வெங்கய்ய நாயுடு விமர்சித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு கேரள கடல் பகுதியில் மீனவர்கள் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது. மாலுமி மசிமிலானோ லட்டோர், தற்போது இத்தாலியில் உள்ளார். மற்றுமொரு மாலுமி சேல்வடோர் கிரோன் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரக அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தை நெதர்லாந்தின் ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம் தனது முதல்கட்ட உத்தரவில், சல்வடோர் இத்தாலி திரும்ப இந்தியா அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக இத்தாலி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவைத் தொடர்பு கொண்டு, மிக விரைவில் சல்வடோர் நாடு திரும்புவதை உறுதி செய்து இத்தாலி தெரிவித்துள்ளது. இரு வீரர்கள் மீதான வழக்கின் தகுதி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்