முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் காட்டுத் தீ: 4 விஷமிகள் கைது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      இந்தியா
Image Unavailable

நைனிடால், உத்தரகாண்ட் காட்டுத் தீ தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில தினங் களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. சுமார் 2,269 ஹெக்டேர் நிலங்கள் இந்த தீயில் கருகி நாசமடைந்துள்ளன. 7 பேர் பலியாகி யுள்ளனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, உத்தரகாண்ட் காட்டுத் தீயை அணைப்பதில் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. பவுரி கர்வால் என்ற வனப்பகுதியில் தீ வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உத்தராகண்டின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, காட்டுத் தீயை அணைக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 6 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக ரூ.5 கோடி நிதியுதவி யும் மாநில அரசுக்கு அளிக்கப்பட் டுள்ளது என்றார்.

புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் காட்டுத் தீ பாதித்த பகுதிக்கு ஹெலி காப்டரால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்த ஒரிரு தினங்களுக்குள் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல் பிரதேசத்திலும் இதுவரை 378 முறை நிகழ்ந்த காட்டுத் தீயால் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு அளவிலான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பசுமை காடுகள் அழிந்துவிட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago