முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கர் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் இன்னும் ஒரு சில மாதங்களில் நான் கோவாவுக்கு திரும்பி வருவேன் என்று பரிக்கர் இணைய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்ததாகவும் தெரிகிறது. கோவா முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெற போவதாகவும் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அதை பரிக்கர் மறுத்தார். மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பரிக்கர் எதிர்பார்கிறார்.

அப்போது பாதுகாப்பு துறைக்கு வேறு ஒருவர் அமைச்சராகலாம் என தெரிகிறது. பள்ளிகளில் பயிற்று மொழி தொடர்பாக கோவாவில் ஆளும் பா.ஜ.கவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையே உரசல் போக்கு நிலவி வருகிறது. பள்ளிகளில் ஆங்கில மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிராந்திய மொழியில்தான் பயிற்று மொழி இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்துவதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் அங்கு போராட்டங்கலும் நடத்தி வருகின்றன.

மேலும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது குறித்து கோவா பா.ஜ.க தலைவர் வினய் டெண்டுல்கர் கூறுகையில், கோவா அரசியலுக்கு பரிக்கர் திரும்பினால், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக உள்ளோம் என்றார். அதே நேரம் பரிக்கர் மாநில அரசியலுக்கு திரும்புவது தொடர்பாக நிலவு வரும் கருத்து குறித்து பா.ஜ மேலிடம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என சுயேட்சை எம்.எல்.ஏ விஜய் சர்தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார். 15 மாதத்திற்குள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி விலகுகிறார் என்றால் நிச்சயம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்