முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பாராளுமன்றத்தில் பயங்கர மோதல் : படுகாயம் அடைந்த எம்.பி.மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு எம்.பி.படு காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி  மகிந்தா ராஜபக்ஷேவிற்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அந்த பாதுகாப்பு நீக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இலங்கை பாராளுமன்றத்தில்  விவாதிக்கப்பட்டபோது, அமைச்சர் சரத் பொன் சேகா கருத்து தெரிவித்தபோது 3எம்.பிக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் ஒரு எம்.பி படுகாயம்அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 மகிந்தா ராஜ பக் ஷேவிற்கு அளிக்கப்படும் ராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படுவது குறித்து, எதிர் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த  சந்தித் சமரசிங்கே என்ற எம்.பிக்கு கடும் அடி விழுந்தது. எதிர் கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். படுகாயம் அடைந்த எம்.பி. சந்தித் சமரசிங்கே தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலை  பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கண்டித்தார். இந்த தாக்குதலை  தொடர்ந்து அவை நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்