முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்தட்டுப்பாட்டில் தவிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கோழி-முட்டைகளை விற்கிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      உலகம்
Image Unavailable

கெய்ரோ -  பணத்தட்டுப்பாட்டில் தவிக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கோழிகளையும், முட்டைகளையும் தெருவில் கூவி , கூவி விற்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா, ஈராக் , லிபியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.  தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடுமையான பணத்தட்டுப்பாட்டில் தவிக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் பண கஷ்டத்தை போக்கிக்கொள்ள கோழிகளையும் முட்டைகளையும் லிபியாவில்உள்ள வீதிகளில் விற்கிறார்கள். அவர்கள் பண்ணைகளில் திருடி வந்த கோழிகளை ஒரு தினாருக்கும் இரு தினாருக்கும் விற்கிறார்கள்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் லிபியாவின் ஷிர்தே பகுதியில் வரி விதிப்பு மற்றும் வாடகை வசூல் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.லிபியாவில் சொந்த கடை வைத்திருப்பவர்களும் வாரத்திற்கு 10தினாரை வாடகை கட்டணமாக தர வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் வசூலித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்