முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் நல்லெண்ண தூதராக டெண்டுல்கர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறவுள்ள இந்திய அணியின் நல்லெண்ண தூதராக டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது., இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான் கான் , துப்பாக்கிச்சூடும் வீரர் அபினவ் பந்தா ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  நல்லெண்ண தூதராக சச்சின் டெண்டுல்கர் மற்றும், இசையமைபாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோரை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு  கேட்டுக்கொண்டது. இந்த அழைப்பை சச்சின் ஏற்றுக்கொண்டதையடுத்து, ரியோ ஒலிம்பிக் தூதராக சச்சின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இன்னும் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்கவில்லை. முன்னதாக, விளையாட்டுடன் தொடர்பு இல்லாமல், பாலிவுட் நடிகரை தூதராக நியமனம் செய்ய்ப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும்  நியாயப்படுத்திய இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு, இந்திய தடகள வீரர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் நோக்கில், பிற பிரபலங்களையும் அழைக்க உள்ளதாக தெரிவித்தது. 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றது நினைவுகூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்