முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவசங்களுக்கு பிள்ளையார்சுழி போட்டதே கருணாநிதிதானே: சமூக ஆர்வலர்கள் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்கமாட்டோம் என்று நேற்றைய ஒமலூர் பிரச்சாரத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் இலவசங்களுக்கு தமிழகத்தில் பிள்ளையார்சுழி போட்டதே கருணாநிதிதானே என்று சூடான பதிலளித்திருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா நான் சொன்னதை செய்தேன், சொல்லாத பலவற்றையும் செய்தேன் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று பொதுக்கூட்டங்களில் முழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க அரசால் தரப்பட்ட பல விலையில்லா பொருட்களை கூட்டங்களில் சுட்டிக்காட்டி ஓட்டு கேட்டு வருகிறார். குறிப்பாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் மற்றும் சைக்கிள், குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட விலையில்லா 20 கிலோ அரிசி, முதியோர் பென்சன் போன்றவற்றை முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அரசு வழங்கிய பொருட்கள் எல்லாமே மக்களுக்கு பயன்படக்கூடியவை. இன்றைக்கு தங்கம் விற்கிற விலையில், ஏழை பெண்களால் அதை வாங்க முடியுமா? அதை உணர்ந்துதான் தாலிக்கு தங்கம் வழங்கி பல பெண்களின் வாழ்வில் மங்கல ஒளியேற்றியவர் முதல்வர்.

குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதால் பல குடும்பங்கள் பசிப்பிணி என்ற நோயில் இருந்து மீண்டனர். லேப்டாப், சைக்கிள் பெற்ற மாணவ, மாணவிகள் முதல்வருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறிவருகிறார்கள். இப்படி முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பொருட்கள் எல்லாமே மக்களுக்கு அன்றாட வாழக்கையில் பயன்படக்கூடியவை.

ஆனால், கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க தலைவர் கருணாநிதி கொடுத்தது என்ன?. மக்களுக்கு தரமற்ற வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை கொடுத்தவர்தான் கருணாநிதி. அதுவும் ரூ.2000 மதிப்புள்ள டி.வி.யை கொடுத்துவிட்டு ரூ.25,000 கோடி வருமானம் பார்த்த குடும்பம் கருணாநிதி குடும்பம் என்று முதல்வர் ஜெயலலிதா ஒரு பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். தி.மு.க ஓட்டுக்காக வண்ணத்தொலைக்காட்சி பெட்டி கொடுத்தார்கள். அதையாவது, சொன்னபடி கொடுத்தார்களா? 21 அங்குல டி.வி.க்கு பதிலாக 14 அங்குல டிவி கொடுத்தவர்கள்தான் இந்த புண்ணியவாளர்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு எதெல்லாம் பயன்படுமோ அவற்றை கொடுத்தார். அதனால்தான் அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது.

இதைபொறுத்துக்கொள்ள முடியாமல்  முக.ஸ்டாலின் உளறி வருகிறார். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தரமாட்டோம். மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று பகுமானம் காட்டி பேசி வருகிறார் ஸ்டாலின். ஆனால் சமூக ஆர்வலர்கள் இதற்கு சூடான பதில் அளித்திருக்கிறார்கள். தமிழகத்தில் 2006 தேர்தலுக்கு முன்பு வரை இலவசங்கள் வழங்கப்பட்டதில்லை. அதற்கு பிள்ளையார்சுழி போட்டதே தி.மு.க தலைவர் கருணாநிதிதான். டி.வி.யை கொடுத்து இலவச திட்டங்களை தொடங்கி வைத்தவரே அவர்தான். ஆனால், இன்றோ இலவசம் தரமாட்டோம் என்று ஸ்டாலின் வாய்கிழிய பேசுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ''திருமங்கலம் பார்முலா'' என்ற ஒரு பார்முலாவை உருவாக்கியதும் இவர்கள் தானே. என்று சமூக ஆர்வலர்கள் மேற்கண்ட சூடான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவர்கள் கேட்பதும் நியாயம் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago