முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நேரம் மாற்றம்

புதன்கிழமை, 4 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி-திருமலை அன்னமய்யா பவனில், தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவ ராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சாம்பசிவ ராவ் நிருபர்களுக்கு கூறியதாவது:- ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் மற்றும் லட்டு பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தரிசன நேரம், தங்கும் அறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து முன்னதாக எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய எஸ்எம்எஸ் ஆப் தயாரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நன்கொடை வழங்கிய பக்தர்கள் அவர்களுக்கான தரிசனம் மற்றும் தங்கும் அறைகளின் விவரங்களை அறிந்து கொள்வார்கள். அதேபோல், பக்தர்களுக்கு காலை 11 மணி முதல் வழங்கப்பட்டு வந்த அன்னப்பிரசாதம் இனி காலை 9 மணி முதல் வழங்கப்படும்.

மேலும், திருமலையில் 3 தடுப்பு அணைகள் கட்டும் தி்ட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப விரைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தேவஸ்தானம் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். திருப்பதி கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 121 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துகான வைகுண்டம் மையத்தில் 24 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 14 அறைகளில் காத்திருந்து 7 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். மே 2-ந்தேதி திங்கட்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.2.86 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்