முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாருக்குதடை விதிக்க ராஜிய ரீதியாக நிர்பந்திக்கிறோம் : மத்திய அரசு

புதன்கிழமை, 4 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  பதன் கோட் விமானப்படை தள தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை ஐ.நா.வில் தடை செய்வதற்கு ராஜிய ரீதியாக நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்  என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது-

லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று கூறுகையில்,  பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முயற்சி மேற்கொண்டது. இந்த முயற்சியை சீனா கடந்த மாதம் தடுத்து நிறுத்தியது. இது குறித்து நாங்கள் சீனாவிடம் கூறுகையில், தீவிரவாத விஷயத்தில் குறிப்பிட்ட அணுகு முறையை நீங்கள் மேற்கொள்ளக்கூடாதுஎன்று தெரிவித்துள்ளோம். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்வதற்கு நாங்கள் ஐ.நா.வில் மேற் கொண்ட முயற்சி தொழில் நுட்ப ரீதியாக தடை பட்டுள்ளது. இருப்பினும் அந்த தீவிரவாதியின் மீது தடை விதிக்க ராஜிய ரீதியாக நிர்ப்பந்தம் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

 கடந்த  2008ம்ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து  பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்கு தடை விதித்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிப்பதை சீனா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தடையை நிறுத்தியது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ்,  பிரிட்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய 5நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளன. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நாடுகள் எந்த ஒரு முடிவையும் தடுத்து நிறுத்த முடியும்.

 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.  எழுத்துப்பூர்வ பதிலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியை பெரும்பாலான நாடுகள் ஆதரித்துள்ளன. அதேப்போன்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்