முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கடும் வறட்சியால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள் 2 லட்சம் குடும்பங்கள் வெளியேறின.

வியாழக்கிழமை, 5 மே 2016      இந்தியா

நகரி  - ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது, பல மாவட்டங்களில் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனந்தபுரம் மாவட்டத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இங்கு நிலத்தடி நீர் மட்டம் 60 முதல் 90 மீட்டர் ஆழத்துக்கு இறங்கி விட்டது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  இங்குள்ள காணேகல்லு, பொம்மனகால் ஆகிய மண்டலங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் மணல் மேடாக காட்சியளிக்கிறது.

மக்கள் முக்கிய விவசாயமான சாத்துக்குடி பயிரிட்டு வந்தனர். தண்ணீர் இல்லாததால் அவைகள் காய்ந்து கருகி விட்டது. பிழைப்புக்கு வழியில்லாமல் பல கிராமங்கள் ஊரை காலி செய்து வெளியேறி வருகிறார்கள். ஆண்கள் பலர் பெங்களூர், சென்னை, கேரளா, குண்டூர் ஆகிய இடங்களுக்கு சென்று விட்டனர். வயதானவர்கள் மட்டும் ஊரில் தங்கி உள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள 63 மண்டலங்களையும் வறட்சி பகுதியாக அரசு அறிவித்து உள்ளது. வாரம் ஒரு முறை டேங்கர் லாரி மூலம் அரசு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்