முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 22போலி பல்கலைக்கழகங்கள்: மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

வியாழக்கிழமை, 5 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  இந்தியாவில்  22போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன என்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்ய சபையில் நேற்று தெரிவித்தார்.  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று ராஜ்ய சபையில் அளித்த எழுத்துப்பூர் பதிலில் கூறியதாவது,  

பங்லகலைக்கழக மானியக்குழு தகவல் படி இந்தியாவில் 22போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை யு.ஜி.சி. சட்டம் 1956க்கு மாறாக செயல்படுகிறது.  உத்தரப்பிரதேசத்தில் 9போலி பல்கலைக்கழகங்களும் டெல்லியில் 5போலி பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் 2ம் கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்களும் உள்ளன. நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்கள் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்ற குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்.

போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம். சட்டம் ஒழுங்கு மாநில அரசுகள் சார்ந்த விஷயம் ஆகும். எனவே போலி பல்கலைக்கழகங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். சில பல்கலைக்கழகங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் மையங்களை அமைப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். . அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்