முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் : உலக வங்கி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 5 மே 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடு களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பூமி வெப்பமயமாதல் அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், பருவமழை பொய்த்தல், சுற்றுச்சூழல் மாசடைதல், காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ‘ஹை அண்ட் டிரை: கிளைமேட் சேஞ்ச், வாட்டர் அண்ட் தி எகானமி’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலக வங்கி  வெளியிட்டது. அதில் கூறியிருப் பதாவது: 

உலகளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வருவாய் அதிகரிப்பு, நகரமயமாக்கம் போன்றவற்றால் தண்ணீரின் தேவை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஆனால், தண்ணீர் விநியோகம் நிச்சய மில்லாமல் இருக்கிறது.  இந்தியாவை பொறுத்தவரை தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்தியாவில் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழை சராசரிக்கும் குறைவாகவும், மதக்கலவரங்கள் அதிகமாகவும் உள்ள நிலையில், இந்தியாவில் சொத்து தொடர் பான வன்முறைகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. குஜராத்தில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால், நிலத்தடி நீர் பாசனம் குறைந் துள்ளது அல்லது அதிக செல வாகக் கூடியதாக மாறிவிட்டது. அதனால், விவசாயிகள் நகரங் களுக்கு குடிபெயர்ந்து வருகின்ற னர்.

இதைத் தடுக்க அதிக பயன் தரும் பாசன தொழில்நுட்பங்கள் போன்ற மாற்று திட்டங்களை உடன டியாக செயல்படுத்த வேண்டும்.  தண்ணீர் பற்றாக்குறை பொரு ளாதார வளர்ச்சியை பாதிக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. உலகளவில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் எச்சரித்துள்ளார்.  நீராதாரங்களை சரியாக கையாளும் திட்டங்களை உலக நாடுகள் செயல்படுத்தாவிட்டால், மக்கள் தொகை அதிகம் கொண்ட சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பல வருடங்களுக்கு கடுமையாக பாதிக்கும்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்