முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகள் விவகார அணுகு முறையில் மாற்றம் தேவை : ஐ.நாவில்.இந்தியா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 5 மே 2016      உலகம்
Image Unavailable

  நியூயார்க்  - புலம் பெயர்வோர் மற்றும் அகதிகள் விவகாரத்தில் வெவ்வேறு அணுகு முறைகள் தேவை என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியது.  அகதிகள் மற்றும் புலம் பெயர்வோர் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கை மீதான விவாதம் பொதுச் சபையில் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தன்மயா லால் பேசியதாவது:  புலம் பெயர்வதும், அகதியாக ஓரிடத்தை விட்டு வெளியேறுவதும் வெவ்வேறு தன்மை கொண்டவை.

இவை இரண்டுக்கும் காரணங்கள், நோக்கங்கள் மற்றும் விளைவுகள் வேறுபடுகின்றன. எனவே இவற்றை எதிர்கொள்ளும் நமது ஒன்றுபட்ட முயற்சியில் மாறுபட்ட, சமச்சீரான மற்றும் நீண்டகால அளவிலான அணுகுமுறை தேவை.  ஒரு நாட்டின் எல்லையை விட்டு மற்றொரு நாட்டின் எல்லைக்கு புலம் பெயர்வதும், அகதியாக செல்வதும் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது.  இவ்வாறு மக்கள் இடம் பெயர்வது நாடுகளின் சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த இரு விவகாரங்களையும் நீண்ட கால அளவிலான மற்றும் விரிவான அணுமுறைகளை நாம் ஒன்றுபட்டு எடுப்பது குறித்து ஆராய்வது அவசியம். இவ்வாறு தன்மயா லால் தெரிவித்தார்.  அகதிகள் மற்றும் புலம்பெயர் வோர் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கையில், “உலகில் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் கடந்த ஆண்டில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 1.5 கோடி பேர் அகதிகள். சுமார் 75 சதவீத அகதிகள் 11 நாடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மொத்த அகதிகளில் பாதிக்கும் மேற் பட்டோர் 7 நாடுகளில் தஞ்சம் புகுந் துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்