முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங் சன் சூகிக்கு புதிய பதவி மியான்மர் ஜனாதிபதி பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      உலகம்
Image Unavailable

யாங்கோன்  -  ஆங் சன் சூகிக்கு புதிய அமைச்சக பதவி அளிப்பதற்கு மியான்மரின் ஜனாதிபதி பரிந்துரை அளித்துள்ளார். இந்த புதிய பதவி மூலம் ஆங் சன் சூகி அதிகார பலமிக்க ராணுவ துறை  நிர்வகிப்பார் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மியான்மர் தேர்தலில்ஆங் சன் சூகியின் ஜனநாயக கட்சி மகத்தான வெற்றியை வெற்றி பெற்றது. இருப்பினும் ராணும் உருவாக்கிய அரசியலமைப்பின் படி ஆங் சன் சூகி ஜனாதிபதியாக ஆக முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் சூகியின் உதவியாளர் ஹிதின் கா ஜனாதிபதியாக பதவியேற்றார்.  தற்போது ஆங் சன் சூகிக்கு முக்கிய பதவி அளிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி அளித்துள்ளார். இதன் படி சூகி அந்த நாட்டின் ராணுவ அதிகாரத்தை நிர்வகிக்கும் பதவியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மர் நாட்டில் தற்போது வறுமை, ஊழல், ராணுவத்தின் பல ஆண்டு ஆட்சிகளால் ஏற்பட்டுள்ள மோதல்கள் ஆகியவை உள்ளன. இந்த பிரச்சினைகள் சூகியின் தேசிய லீக்  கட்சிக்கு பெரும் சவால்களாக உள்ளன. சூகி ஆதரவாளர் தலைமையில் தற்போது அமைந்துள்ள அரசு அரசியல் கைதிகள் பலரையும் விடுதலை செய்துள்ளது. முந்தைய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சைக்குரிய விசாரணையில் உள்ள நபர்களும்விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்