முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம்: கண்ணய்யா உடல்நலம் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து கண்ணய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் மாணவர்கள் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக, ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச் சாரியா ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

இதற்கிடையே, ஜேஎன்யூ.வில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்த 5 பேர் உயர்மட்ட கமிட்டி பல்கலை. நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், கண்ணய்யா குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர 13 மாணவர்களுக்கும் அபராதம் விதித்தது. உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, முஜீப் ஆகியோர் தற்காலிகமாக பல்கலைகழகத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி, கண்ணய்யா குமார் தலைமையில் 19 மாணவர்கள் பல்கலை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர். இந்நிலையில், 8-வது நாளாக நேற்று உண்ணா விரதம் இருந்த கண்ணய்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. திடீரென அவர் வாந்தி எடுத்ததால், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்