முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த புகார் எதிரொலி : ஊத்தங்கரை தொகுதி தி.மு.க. வேட்பாளர் வீடு மற்றும் மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      தமிழகம்
Image Unavailable

மத்தூர்  - பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த புகாரை அடுத்து கிருஷ்னகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தி.மு.க. வேட்பாளர் வீடு மற்றும் மருத்துவமனையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் மாலதி நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரது வீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் பெரியார் நகரில் உள்ளது. இந்த வீட்டின் அருகில் "சண்முகா கரு உருவாக்கும் மையம்" என்ற பெயரில் மருத்துவமனையும் நடத்தி வருகிறார். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீடு மற்றும் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு இருந்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு ஊத்தங்கரை தொகுதி தேர்தல் அதிகாரி விஜயகுமாரி, ஊத்தங்கரை தாசில்தார் அமுதன் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தி.மு.க. வேட்பாளர் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சென்றனர். காலை 9 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வந்ததும் சோதனை தொடங்கியது. வீடு மற்றும்  மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது.

அரை மணி நேரம் மட்டும் சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களிடம் சோதனையில் எதுவும் சிக்கியதா என்று கேட்டபோது நாங்கள் எதுவும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு சென்றனர். பின்னர் பறக்கும் படை அதிகாரிகளும் வேட்பாளரின் வீடு மற்றும் மருத்துவமனையில் தொடர்ந்து சோதனை நடத்தினர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் சோதனையை முடித்துவிட்டு 9.35 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்