முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை : நெதர்லாந்து சென்றார் சுரேஷ் ரெய்னா

செவ்வாய்க்கிழமை, 10 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா-பிரியங்கா தம்பதியருக்கு குழந்தை பிறப்பதால், முதல் முறையாக ஐ.பி.எல். ஆட்டத்தை கைவிட்டு நெதர்லாந்து சென்றார். இதனால் மே 14-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் 1பங்கேற்கவில்லை. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரெய்னா. ஐ.பி.எல். போட்டிகளில் ஒரு ஆட்டத்தை கூட தவற விடாமல் அனைத்து ஆட்டத்தில் ஆடியவர் என்ற சாதனையை படைத்தவர். இந்த நிலையில் ரெய்னா முதல் முறையாக ஐ.பி.எல். ஆட்டத்தை தவறவிடுகிறார். ரெய்னாவின் மனைவி பிரியங்கா கர்ப்பமாக உள்ளார்.

விரைவில் அவருக்கு முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. இதற்காக ரெய்னா தனது மனைவி வசிக்கும் நெதர்லாந்து நாட்டுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். இதனால் குஜராத் லயன்ஸ் அணி அடுத்து பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடும் ஆட்டத்தில் (மே14) விளையாடமாட்டார். ஐ.பி.எல். ஆட்டத்தை விளையாடமல் போவது அவருக்கு இதுவே முதல் முறையாகும். இதனால் மெக்குல்லம் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோர் குஜராத் அணிக்கு அடுத்த ஆட்டத்துக்கு கேப்டனாக பணியாற்றலாம் என்று தெரிகிறது.

ரெய்னா ஐ.பி.எல். போட்டியின் முதல் 8 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் குஜராத் லயன்ஸ் அணிக்காக இந்த சீசனில் ஆடுகிறார். 29 வயதான ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் 143 ஆட்டத்தில் விளையாடி 3985 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 41.45 ஆகும். ஒரு சதமும், 26 அரை சதமும் எடுத்துள்ளார்.அவருக்கு அடுத்தப்படியாக டோனி 139 ஆட்டத்திலும், ரோகித்சர்மா 138 ஆட்டத்திலும், தினேஷ் கார்த்திக் 137 போட்டியிலும், விராட் கோலி 132 ஆட்டத்திலும் ஆடி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago