முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரியம்- ஐ.சி.சி .தலைவர் பதவியில் இருந்து மனோகர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி -  இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்தும் சசாங்க் மனோகர் நேற்று பதவி விலகினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி)  தனி அதிகாரம் கொண்ட தலைவராக பதவி ஏற்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார்.  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங்க் மனோகர் நேற்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். லோதா கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில் சசாங்க் மனோகர் பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் குறித்து சசாங்க் மனோகர்  இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகுருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

 தற்போது வகித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் பதவி விலகுகிறேன். நான் சர்வதேச கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதி பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு எனக்குஆசிய கிரிக்கெட் கவுன்சிலில்  அளித்த பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என்றார். சசாங் மனோகர் பதவி விலகியதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தற்போதைய செயலாளர் அனுராக் தாகுர், ஐ.பி.எல். தலைவர்  ராஜீவ் சுக்லா மற்றும் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்க தலைவர் அஜய் ஷிர்கே ஆகியோர் பெயர்கள் அடிப்படுகின்றன.

 இந்திய கிரிக்கெட் வாரிய விதிகளின் படி, தலைவர் பதவி விலகிய நிலையில் 15நாட்களுக்குள்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதி பொறுப்பில் இருந்ததால் சசாங்க் மனோகர்  சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியிலும் நீடிக்க முடியாது. அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தனி அதிகாரம் கொண்ட தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. 58வயது சசாங்க் மனோகர் எந்த நாட்டு  கிரிக்கெட் போர்டிலும் பிரதிநிதியாக இருக்க மாட்டார்.  சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் அளித்த பரிந்துரையின் பேரில் சசாங் எந்த கிரிக்கெட் போர்டு பிரதிநிதியாகவும் இருக்க மாட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்