முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

புதன்கிழமை, 11 மே 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்த்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மேல்சபையில் இதுகுறித்து நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:- பிளாஸ்டிக் நோட்டு அச்சிடுவது பரிசீலனையில் உள்ளது. தேவையைவிட நாணயங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. 2013-14-ல் ரிசர்வ் வங்கி 1,203.30 கோடி நாணயங்கள் கோரியது, ஆனால், 767.7 கோடி நாணயங்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டன. 2014-15-ல் 1,384 கோடி நாணயங் கள் ரிசர்வ் வங்கியின் தேவைப் பட்டியலாக இருந்தது. ஆனால், 790.7 கோடி நாணயங்கள்தான் அளிக்கப்பட்டன. நாணய உற்பத்தியை ஆண்டுக்கு 1,800 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்