முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வெளிநாட்டு வீரர் டி வில்லியர்ஸ் சாதனை

சனிக்கிழமை, 14 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு  - குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 21 ரன்னைத் தொட்டபோது டி வில்லியர்ஸ் 3000 ரன்னைக் கடந்தார். இதனால் 3 ஆயிரம் ரன்னைக் கடந்த 3-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். ஐ.பி.எல். சீசன்-9 தற்போது நடைபெற்று வருகிறது.

ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டைச் சேர்ந்த கெய்ல், வார்னர் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் கெய்ல், வார்னர் ஆகியோர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை ஏற்கனவே தாண்டி விட்டனர். டி வில்லியர்ஸ் மட்டும் 3000 ரன்களை தாண்டாமல் இருந்தார்.

ஆனால், நேற்று நடைபெற்று வரும் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 21 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல். போட்டிகளில் 3000 ரன்களைத் தொட்டார். மேலும் நேற்றைய போட்டியில் இவர், 52 பந்தில் 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதில் 10 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் 3000 ரன்களைக் கடந்த 3-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். டி வில்லியர்ஸ் 2008 சீசனில் 95 ரன்னும், 2009-ல் 465 ரன்னும், 2010-ல் 111 ரன்னும், 2011-ல் 312 ரன்னும், 2012-ல் 319 ரன்னும், 2013-ல் 360 ரன்னும், 2014-ல் 395 ரன்னும், 2015-ல் 513 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்