முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இக்கட்டான நிலையில் இந்திய குத்துச்சண்டை: வீராங்கனை மேரி கோம் வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :  இக்கட்டான நிலையில் இந்திய குத்துச்சண்டை உள்ளது என்று இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்தார்.  ஆப்கானிஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் இந்த மாதம் 19ம் தேதி முதல்  27ம் தேதி வரை உலக குத்துச்சண்டை போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் 5முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார்.  அவர் இந்த போட்டிக்கு செல்வதற்கு முன்னர்  இந்திய குத்துச்சண்டையில் நிலவும் இக்கட்டான சூழல் குறித்து தனது வேதனையை தெரிவித்தார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

உலக குத்துச்சண்டை போட்டி எப்படி செல்கிறது என்று பார்ப்போம். நான் இந்த போட்டியில் ஒரு தூதராக பங்கேற்கிறேன். நான் இதை எனக்கு சாதகமான விஷயமாக பார்க்கிறேன். ஆனால் சாதகமற்ற விஷயங்களை நான் கருத்தில் கொள்ள வில்லை. நான் இந்த போட்டியில் மிக சிறப்பாக மோதி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேனாஇல்லையா என்று தெரியாது. ( மேரி கோம் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மணிப்பூர் வீராங்கனை ஆவார்)இந்தியாவில் குத்துச்சண்டை பெடரேஷன் இல்லாதது சாதகமற்ற விஷயமாகும். அதிகாரப்பூர்வமாக உலக குத்துச்சண்டை போட்டியில் பிரதிநிதித்துவம் இல்லை. இதில் இந்தியா சார்பில் எந்த குத்துச்சண்டை நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை.

சில நேரங்களில் நம்மை யார் ஆதரிபபார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். உலகப்போட்டிகளில் உ ரிய முறையில் உள்ள குத்துச்சண்டை பெடரேஷன்கள் தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கவில்லை என கருதும்போது உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் நாம் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் உலக போட்டியில் நமது இந்திய அணிக்கு எந்த ஆதரவும் கிடையாது. இந்திய குத்துச்சண்டை இக்கட்டான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை ஒரு இந்திய குத்துச்சண்டை வீரர் ஷிவா தாப்பா மட்டும் தகுதி பெற்றுள்ளார். கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்க 8பேர் இருந்தோம்.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற அஸ்தானா உலக குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதி வரை தகுதி பெற வேண்டும்.இதற்காக நான் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்