முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா :  ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பிளே ஆப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த பிளே ஆப் நிலைக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  தங்களது ஆட்டங்களில் வென்றுள்ளதால் புள்ளிப்பட்டியலில் முன்னணி பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இந்த அணிகள் கொல்கத்தாவில் இன்று மோதுகின்றன. இதில்  2முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விராட் கோலி, டி.வில்லியர்ஸ் இடம் பெற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடும் சவாலை எழுப்பும். 

இரு அணிகளுக்கும் இன்னும் 3ஆட்டங்கள் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16புள்ளியை பெறுவதற்கு இன்னும் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற வேண்டும் . இன்னும் ஒரு வெற்றி கிடைத்தால்  அந்த அணிஅரை இறுதி போட்டி நிலையை எட்டும்.
 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது 10புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணிபிளே ஆப் போட்டி நிலையை அடைவதற்கு அது இன்னும் ஆட வேண்டிய அனைத்து லீக்ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலியும், ஏ.பி.டிவில்லியர்சும் நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளனர்.  ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 144ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்சின் டிவில்லியர்சும்(129ரன் 52 பந்துகள்) விராட் கோலியும்(109ரன் , 55பந்துகள்)  2வது விக்கெட்டுக்குஜோடி சேர்ந்து 96பந்துகளில்  229ரன்களை குவித்தார்கள். பெங்களூரு அணி சேர்த்த 248 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவிக்கும் இரண்டாவது அதிக பட்ச ரன்னாகும். இதற்கு முன்னர் 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இதே பெங்க ளூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் சேர்த்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் 2-வது விக்கெட்டுக்கு கோலி-டி வில்லியர்ஸ் ஜோடி 229 ரன்கள் குவித்தது. இதுவும் சாதனையே. இந்த ஜோடி கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக இதே விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்திருந்தன. இந்த சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்