முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் : பிளே-ஆப் சுற்றில் நுழைய 6 அணிகள் கடும் போட்டி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். போட்டியில் பிளேஆப் சுற்றில் நுழை 6 அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே வாய்ப்பை பஞ்சாப், புனே ப்ளே-ஆப் சுற்றில் நுழையும் தகுதியை இழந்துள்ளன. 9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 ஆட்டம் முடிந்துள்ளன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதியாக இறுதி செய்யவில்லை. டோனி தலைமையிலான ரைசிங் புனே, முரளிவிஜய் தலைமையிலான கிங்ஸ் லெவன் ஆகிய 2 அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ், ஜாகீர்கானின் டெல்லி டேர்டெவில்ஸ், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 6 அணிகள் போட்டியில் உள்ளன. இதில் 4 அணிகள் தகுதி பெறும். ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்பு விவரம்:–

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்னும் 2 ஆட்டத்தில் மோத வேண்டும். டெல்லியை 20–ந்தேதியும், கொல்கத்தாவை 22–ந்தேதியும் சந்திக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் வென்றாலே அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழைந்துவிடும். இரண்டு ஆட்டத்தில் தோற்றால் மற்ற அணியின் முடிவை பொறுத்து அமையும். அந்த நேரத்தில் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தில் இருக்கிறது. ரன்ரேட்டில் தற்போது மும்பை, குஜராத்தை விட அதிகமாக இருக்கிறது. குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். இதில் இரண்டு ஆட்டத்தில் வென்றால் உறுதியாக நுழையும். ஒன்றில் வென்றால் ரன்ரேட் அவசியம்.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் லயன்சை 21–ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இதில் தோற்றால் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பை இழக்கும்.

குஜராத் லயன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4–வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. கொல்கத்தாவை 19–ந்தேதியும், மும்பையை 21–ந்தேதியும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டிலும் வெற்றி பெற போராடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்தில் (பஞ்சாப், டெல்லி) அந்த அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலே அந்த அணி வாய்ப்பை இழந்துவிடும்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புனேயை இன்றும், ஐதராபாத்தை 20–ந்தேதியும், பெங்களூரை 22–ந்தேதியும் சந்திக்கின்றன. இதில் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். இரண்டு ஆட்டத்தில் தோற்றால் வாய்ப்பை இழக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்