Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணிக்கு டிராவிட்டை விட சிறந்த பயிற்சியாளரை கண்டுபிடிப்பது கடினம் : ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து

புதன்கிழமை, 18 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் டங்கன் பிளெட்சர். இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடும்போது டங்கன் பிளெட்சர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதிலிருந்து ரவி சாஸ்திரி இயக்குனர் பதவியுடன் தலைமை பயிற்சியாளர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்திய அணி அடுத்த வருடம் வரை அதிக அளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதனால் தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ. களம் இறங்கியுள்ளது. பலபேரிடம் பேசிப்பார்த்தும் ஒருவரும் பயிற்சியாளர் பதவிக்கு சம்மதிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிடமும் கேட்டனர். ஆனால், பயிற்சியாளர் பதவியை பெற அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இந்திய கிரிக்கெட் அணிக்கு டிராவிட் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பொருத்தமானவராக இருப்பார். இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை சார்ந்தது. பயிற்சியாராக இந்தியர் இருக்க வேண்டுமா? அல்லது வெளிநாட்டவர் இருக்க வேண்டுமா? இதில் எதை கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது என்பது தெரியவில்லை. மேலும் அணியின் கேப்டன் என்ற நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. ஆனால் டிராவிட்டை விட சிறந்த பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பது கடினம் என்றே நினைக்கிறேன்.

பயிற்சியாளராக செயல்பட அவர் விரும்பினால், அதை அவர் சிறப்பாக செய்வார். அனுபவம் வாய்ந்த டிராவிட் கிரிக்கெட் நுணுக்கம் அதிகம் தெரிந்தவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர். இவ்வாறு பாண்டிங் கூறினார். முன்னதாக, பெரும்பாலான முன்னாள் வீரர்கள் டிராவிட்டுதான் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய முன்னாள் சுனில் கவாஸ்கரும் இதே கருத்தை வலியுறுத்தி நிலையில், ரிக்கி பாண்டிங் அதே கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்