முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்டகியில் ஹிலாரி வெற்றி

வியாழக்கிழமை, 19 மே 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலில், ஹிலாரி கிளின்டன் 50 சதவீத வாக்குகளுடன் கென்டகி மாகாணத்தை கைப்பற்றி உள்ளார். இதுபோல,  இவரது சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் ஓரிகான் மாகாணத்தில் 53 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். 

வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாகாண வாரியாக நடைபெற்று வரும் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரியும் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்