முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நச்சத்தன்மை பாதிப்பால் பெரு நாட்டில் பள்ளிக் குழந்தைகள் 100 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 20 மே 2016      உலகம்
Image Unavailable

நெபோ, பெரு நாட்டில்  விமானம் மூலம் வயலில் களை கொல்லி மருந்து தெளித்த போது அங்கு அருகில் இருந்த பள்ளியில் இருந்த குழந்தைகளை நச்சத்தன்மை தாக்கியதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

பெரு நாட்டில் வடபகுதியில்  நெபேனா  நகரம் உள்ளது.  அங்குள்ள ஒரு உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு வயலில்  களைக்கொல்லி மருந்து விமானம் மூலம் தெளிக்கப்பட்டது. அதன் அருகில் ஒரு பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். மருந்து தெளிக்கும்   போது பள்ளியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

எனவே, அந்த மருந்தின் விஷத்தன்மையை சுவாசித்த பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வாந்தி- மயக்கம்  ஏற்பட்டது. சிலருக்கு வயிறு  மற்றும் தலைவலி ஏற்பட்டது. உடனே  அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 92 குழந்தைகள் உயிரிழந்தனர்.   இவர்களை தவிர  3 ஆசிரியர்களும் பலியாகினர். மேலும்  பலருக்கு  தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. களைக் கொல்லி மருந்து தெளிக்க அந்த நிறுவனம் நெபேனா நகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. மேலும் இந்த களைக் கொல்லி மருந்து புற்றுநோயை உருவாக்க காரணமாக இருந்ததால் ஏற்கனவே அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்