முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கோலாகலம் குடம், குடமாக பாலாபிஷேகம்

சனிக்கிழமை, 21 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்  -  வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும்மதுரை திருப்பரங்குன்றம் முருகன்கோவில்களில்  நேற்று பக்தர்கள் குவிந்தனர் .திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் ,குடமாக பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமியை பக்தர்கள் மனம் முருக வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி மலைக்கோவிலில் நேற்று வைகாசி விசாகத்திருவிழா நடைபெற்றது. கடந்த 12ம் தேதி வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன்  துவங்கியது. 

தினமும் மாலையில் சுவாமி ,தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகம் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.இதில் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். பக்தர்கள் சுமந்து வந்த பால் குடங்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அழகர் கோவில் சோலை மலை மண்டபம் முருகன் கோவிலில் வைகாசி விசா திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை 3மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு தீபாரதனை மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது.
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தார்கள். நேற்று கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் காவடி,சேவல் கொடியாகதான் தெரிந்தது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டார்கள்.

கடற்கரையே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் கந்தனுக்கு அரோகரா ,முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளந்தது. இந்த ஆண்டு விசாக திருவிழா கடந்த 12ம் தேதியன்று துவங்கியது. தினமும் பகலில் உற்சசவருக்கு உச்சி கால தீபாரதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினார். விசாக திருவிழாவான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாரதனை நடந்தது. அதிகாலை 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் 2.30மணிக்கு தீபாரதனையும் காலை 10மணிக்கு மூலவருக்கும் சண்முகருக்கும் உச்சி கால அபிஷேகம் நடைபெற்றது. காலை 11மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்திற்கு வந்தார். விழாவில் ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவமியை தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்