முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: 91 ரன்னில் பாலோ-ஆன் ஆனது இலங்கை

சனிக்கிழமை, 21 மே 2016      விளையாட்டு
Image Unavailable

லீட்ஸ் ஹெட்லிங்லே : இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 91 ரன்னில் பாலோ-ஆன் ஆனது இலங்கை, நேற்றைய 3-வது நாள் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 91 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஆண்டர்சன் 5 விக்கெட்டும், பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் ஹெட்லிங்லேவில் இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 298 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி சதம் (140) அடித்தார். இலங்கை அணியின் ஷனகா, சமீரா தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன், பிராட் ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 91 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 34 ரன்கள் சேர்த்தார். ஆண்டர்சன் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களும், பிராட் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 91 ரன்னில் சுருண்டதால் பாலோ-ஆன் ஆன இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் குறைவான நேரத்திலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 438 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவ் (434) சாதனையை சமன் செய்திருந்தார்.

பின், நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கருணரத்னே, ஜே.கே சில்வா, ஆண்டர்சன் பந்துவீச்சில் பேய்ஸ்டாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். 12.5 ஓவரில் இலங்கை அணி 50 ரன்களை கடந்தது. 14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. பின் வந்த மென்டீஸ் சிறப்பாக ஆடி 53 ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஆண்டர்சன் பந்துவீச்சில் பெளல்டு ஆகி வெளியேறினார். இலங்கை அணி 2-வது இன்னிங்சில் நேற்று 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்