முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்: பட்டத்தை வெல்லும் முனைப்பில் நடால்!

சனிக்கிழமை, 21 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பாரீஸ் நகரில் இன்று தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் 10–வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களம் இறங்கவுள்ளார்.  முன்னனி வீரர் ரோஜர் பெடரர் விலகியுள்ள நிலையில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

சாராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான ரபெல் நடால் 10–வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா என்று டென்னீஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், உலகின் 4–ம் நிலை வீரரான அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 9 முறை வென்று சாதனை படைத்து உள்ளார். கடந்த பிரெஞ்சு ஓபனில் நடால் கால் இறுதியில் தோற்றார் இந்த முறையும் அவருக்கு சவால் காத்திருக்கிறது. ஜோகோவிச் (செர்பியர்) ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) நடால் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து ) ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

17 முறை கிராண்சிலாம் பட்டம் வென்றவரும், 3–ம் நிலை வீரருமான ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான செலீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 22–வது பட்டத்தை வெல்லும் ஆர்வதில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்