முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தகம்-எரிசக்தி -முதலீட்டுகூட்டுறவை மேம்படுத்த ஈரான் பயணம் - பிரதமர் மோடி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2016      உலகம்
Image Unavailable

டெகரான் : வர்த்தகம்- எரிசக்தி  -முதலீட்டுகூட்டுறவை மேம்படுத்துவே ஈரான் பயணம் மேற்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஈரான் தலைநகர் டெகரானுக்கு சென்றார். அவர் முதன் முறையாக தற்போது எரிசக்தி துறையில் முன்னிலை வகிக்கும் ஈரானுக்கு சென்றுள்ளார்.

ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்தியில், எனது இந்த பயணம், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், மற்றும் இருநாட்டு மக்கள் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாகவே மேற்கொள்ளப்படுகிறதுஎன தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு சென்றதும் அவர் அங்குள்ள குருத்வாராவிற்கு சென்றார்.இந்த பயணத்தின் போது அவர் ஈரான் ஜனாதிபதி ரவுகானி மற்றும் ஈரானின் உச்ச தலைவர் ஆகியோரை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளின் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் . ஈரானும், இந்தியாவும்நாகரீக உறவுகள் அமைதிய பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, பிராந்தியத்தின் வளம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

தெற்கு ஈரானில் சப்பார் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் வழியாக செல்லாமல் ஆப்கானிஸ்தானிற்கு செல்ல முடியும்.ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நெருங்கிய பாதுகாப்பு உறவு, பொருளாதார நலன் விஷயங்களில் உறவு கொண்டிருக்கிறது.

ஈரானில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவிற்கு சென்ற வந்து பின்னர் பிரதமர் மோடி இந்தியா-ஈரான்  உறவு குறித்த சர்வதேச மாநாட்டை துவங்கி வைத்தார். ஈரான் ஜனாதிபதி ரவுகானி அழைப்பின் பேரில் நேற்றும், இன்றும் இருநாள் பயணமாக ஈரானுக்கு மோடி சென்றுள்ளார். இந்திய கடல் வழி போக்குவரத்திற்கு உதவும் சப்பார் துறைமுக மேம்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் இந்தியா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஈரானில் இருந்து வரும் எண்ணெயின் அளவை இரு மடங்காக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஈரானுக்கு இருந்த சர்வதேச தடைகள் நீங்கிய பின்னர் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அந்த நாட்டுடன் தீவிரமாக ராஜிய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியின் பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி ஈரானுக்கு செல்வதற்கு  முன்னர் அந்த நாட்டிற்கு சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அந்த நாட்டிற்கு சென்று வந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago