முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் முல்லா அக்தர் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்தான் உறுதிப்படுத்தியது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2016      உலகம்
Image Unavailable

நாபிடா(மியான்மர்) : தலைவர் முல்லா அக்தர் மன்சூரை கொல்வதற்கு எங்களது ஆளில்லா விமானங்கள் குறி வைத்தன.அந்த தீவிரவாதி அமெரிக்க துருப்புக்களுக்கும், அமைதி பேச்சு வார்த்தைக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தார்என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.இந்தநிலையில் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பின் தங்கிய தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. அந்த எல்லைப்பகுதியில்  தலிபான் தீவிரவாத தலைவர் மன்சூர் மற்றும் இன்னொரு நபரை ஏற்றிச் சென்ற  வாகனம் மீதுஅமெரிக்க ஆளில்லா விமானம் சனிக்கிழமையன்றுதாக்கியது. அந்த தாக்குதலில் அவர் உயிரந்தாரா என்று தெரியவில்லைஎன்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்  அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று மியான்மரில் கூறுகையில்,

அமெரிக்காவிற்கு தலிபான் தீவிரவாத தலைவர் மன்சூர் பெரும் அச்சுறுத்தலாக உள்ளார். அவர் ஆப்கன் மக்களுக்கும், அந்த நாட்டு படைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார். அவர் அமைதி பேச்சு வார்த்தைக்கும் நேரிடையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.எனவே அவர் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தியது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தி தலிபான்களுடன் நேச உறவை அந்த நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும் , அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம் . அந்த விருப்பத்திற்கு எதிராக தலிபான் தலைவர் அக்தர் மன்சூர் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசிற்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே மீண்டும் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் புதிய சுற்று பேச்சு வார்த்தையை இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடத்தியுள்ளனர் . இந்த நிலையில் அமெரிக்க விமானம் தலிபான் தலைவர் அக்தர் மன்சூர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago