முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகையாக 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை தேர்வு

திங்கட்கிழமை, 23 மே 2016      சினிமா
Image Unavailable

பேரிஸ் - பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை ஜேக்லின் ஜோஸ் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த 69 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த 2016-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இந்த விருதுகளுக்கான தேர்வுக்குழு நடுவராக மேட் மேக்ஸ் புகழ் இயக்குனர் ஜியார்ஜ் மில்லர் நடுவராக செயல்பட்டார். திருவிழாவின் முதல் படமாக, வுடி ஆலனின் கேஃப் சொசைட்டி திரையிடப்பட்டது. 79 வயதான கென் லோச், ‘ஐ டேனியல் பிளேக்’ படத்திற்காக ‘தங்கப்பனை’ விருது பெற்றார்.

இதன் மூலம் கேன்ஸ் விழாவில், இரண்டு முறை ‘தங்கப்பனை’ விருது வென்ற 9 இயக்குனர்கள் பட்டியலில் கென் லோச்சும் இணைந்து இருக்கிறார். இதற்குமுன். 2006-ம் ஆண்டு ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பார்லி’ படத்திற்காக கென் லோச் ‘தங்கப்பனை’ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய இயக்குனர் அஸ்கார் ஃபர்காடி இயக்கிய ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரு விருதுகளைத் தட்டி சென்றது. சிறந்த நடிகைக்கான விருதினை ‘மா ரோசா’ என்ற பிலிப்பைன்ஸ் மொழி படத்தில் நடித்த ஜேக்லின் ஜோஸ் (52) தட்டிச் சென்றார்.

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு. போலீசாரிடம் பிடிபட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் பெண்ணாக ஜேக்லின் ஜோஸ் ‘மா ரோசா’ படத்தில் நடித்தமைக்காக இந்த விருதுக்கு இவர் தேர்வாகியுள்ளார். அதிகமான எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்த ‘இட்'ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வோர்ல்ட்’ என்ற திரைப்படம் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago