முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில், நாளை பதவியேற்பு விழா : பினராயி விஜயன் அமைச்சரவையில் 19 பேருக்கு பதவி

திங்கட்கிழமை, 23 மே 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரளாவில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி அரசு ஆட்சி அமைக்கிறது. அந்த கூட்டணி நாளை பதவியேற்கிறது. பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்கிறார். அவரது அமைச்சரவையில் 19பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். கேரளாவில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை வீழ்த்தி விட்டு இடது சாரிகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் பதவியேற்கிறார். இதனைத்தொடர்ந்து அவரது அமைச்சரவையில்  இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை தேர்வு செய்யும் கூட்டம்  திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்நறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் வி.எஸ் .அச்சுதானந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில்  இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 12பேருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4பேருக்கும் கூட்டணி கட்சிகளான ஜனதா1 என்.சி.பி. 1கேரள காங்கிரஸ்(எஸ்)1 ஆகிய 19பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தன் இந்த முறையும் முதல்வராக பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால் அந்த பதவி அவருக்கு கிடைக்கவில்லை . இதனால் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் சிறப்பு அதிபர் மரியாதை அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார். இருப்பினும் அச்சுதானந்தன் ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை.  அமைச்சர்களை தேர்வு செய்யும் கூட்டம் முடிந்ததும், அச்சுதானந்தன் ஆதரவாளர்கள் அச்சுதானந்தனை ஆதரித்து கோஷம் எழுப்பினார்கள்.
பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை 25ம்தேதி பதவியேற்கிறது. கவர்னர் சதாசிவம் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்