முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து : பிரதமர் மோடி- ஜனாதிபதி ஹசன் ரவுகானி முன்னிலையில் நிறைவேறியது

திங்கட்கிழமை, 23 மே 2016      உலகம்
Image Unavailable

டெகரான்  -  இந்தியா-ஈரான் இடையே வரவாற்று சிறப்பு மிக்க சப்பார் துறைமுகம் உள்கட்டமைப்புமேம்பாடு உள்பட 12 ஒப்பந்தங்கள். பிரதமர் மோடி, ஈரான் ஜனாதிபதிஹசன் ரவுகானி முன்னிலையில் கையெழுத்தானது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2நாள் பயணமாக ஈரான் தலைநகர் டெகரானுக்கு சென்றுள்ளார். அவர் நேற்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் சப்பார் துறைமுகம் மேம்பாடு உள்பட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி முன்னிலையில் கையெழுத்தாகியது.ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள சப்பார் துறைமுகத்தை மேம்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் வழியாக வராமல் ஆப்கானிஸ் தான் வருவதற்கு சப்பார் துறைமுகம் உதவும். எனவே இந்த துறை முகத்தை மேம்படுத்துவதில் இந்தியா முக்கியத்துவம் அளித்து 50கோடி டாலர் நிதியுதவியை அளிக்க முடிவு செய்துள்ளது. சப்பார் துறைமுகத்தின் மூலமாக ஆப்கானிஸ்தான், காமன் வெல்த் நாடுகள், மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு இந்தியாவால் வர முடியும்.

டெகரானில் பிரதமர் மோடி கூறுகையில், தீவிரவாத அச்சுறுத்தல்களை தொடர்ந்து கண்காணிக்க வும், போதை மருந்து கடத்தல், சைபர் கிரைம்,ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவும் , ஈரானும் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுக்கின்றன.மேலும் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்கள் இடையே கலந்துரையாடல் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.  கடந்த 15ஆண்டுகளுக்கு பின்னர் ஈரான் சென்ற முதல் இந்திய பிரதமராக மோடி உள்ளார்.  ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானியிடம் ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மோடியும், ஹசன் ரவுகானியும் கூட்டாக பேட்டியளித்தார்கள். இந்த பிராந்தியத்தில் தீவிரவாதம் பெரும் சவாலாக இருக்கிறது.

எனவே இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், ஆகிய நாடுகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. இதனால் தீவிரவாதப்பிரச்சினை இந்த பிராந்தியத்தில் பெரும் சவாலாக உள்ளது. இரு தலைவர்களும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் விவாதித்தார்கள்.  தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம் என்று ஹசன் ரவுகானி தெரிவித்தார்.  

சப்பார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 50கோடி டாலர் நிதியுதவியை அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது .இது முக்கியமான மைல் கல் என்று பிரதமர் மோடி கூட்டுப்பேட்டியில் தெரிவித்தார். இந்த பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் அதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்