முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய வீரர் மரணம் -2 பேர் மாயம்

திங்கட்கிழமை, 23 மே 2016      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு - எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய வீரர் சுபாஷ் பால் மரணம் அடைந்தார். மேலும் 2பேர் மாயமானார்கள் என்று மலையேற்றக்குழுவினர் தெரிவித்தனர்.  எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறிய இந்திய வீரர் சுபாஷ் பால் சுகவீனம் அடைந்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டார்.  அவரது உடல் நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் அடைந்தார். அந்த வீரர் கடந்த சனிக்கிழமையன்று 8ஆயிரத்து 849 மீட்டர் உயரத்தை அடைந்தார்.

ஆனால் அங்கு அவர் திடீரென்று நிலை குலைந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்தார்  உலகின் அதி உயரமான  8ஆயிரத்து 849 மீட்டரில் மரணம் அடைந்த 5வது மலை ஏறும் வீரர் சுபாஷ்பால் ஆவார். அவருடன் சென்ற 4வீரர்-வீராங்கனைகள் மாயமானர்கள் .இதில் 2பேர்  கண்டுபிடிக்கப்பட்டார்கள். இதனால் 2 வீரர்களை தேடும் பணி நடக்கிறது.

சுனிதா ஹசரா என்ற மலை ஏறும் வீராங்கனை நேற்று முன்தினம்  கண்டுபிடிக்கப்பட்டு வான் வழியாக காப்பற்றப்பட்டார்.  சுனிதாவுடன் சென்ற பரேஷ் நாத், கவுதம் கோஷ் ஆகிய வீரர்களை காணவில்லை. அவர்கள் 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்த போது மாயமானார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த ஆண்டு நில நடுக்கத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் 19 மலை ஏறும் வீரர்கள் மரணம் அடைந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago