முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது : காங்கிரஸ் தாக்கு

திங்கட்கிழமை, 23 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் மோடி தலைமையிலான இரண்டு ஆண்டுகால பாஜ கூட்டணி ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜ கூட்டணி ஆட்சி தனது இரண்டு ஆண்டு காலத்தை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய எம்.பி.களுக்கு பிரதமர் மோடி, கட்சி தலை\வர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தனர்.

இந்த சூழலில் பிரதமர் மோடியின் இரண்டாண்டு கால ஆட்சி ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் கட்தி விமர்சித்துள்ளது. மேலும் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் டுவிட்டரில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி இதுவரை மவுனமே சாதித்து வந்துள்ளார். அவரது இரண்டு ஆண்டு கால ஆட்சி ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாத்ரியில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக முதியவர் அடித்து கொல்லப்பட்டதில் தொடங்கி ஐதராபாத் கல்லூரி மாணவர் ரோஹித் வெமூலா விவகாரம், பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றை குறித்த சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

அதில் இந்த விவகாரங்கள் அனைத்தும் பிரதமர் மோடி மவுனமே சாதித்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தனது டுவிட்டரில், காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் சரிவை சந்தித்து விட்டதாக பாஜ தவறாக கூறிவருகிறது. உண்மையில் 353 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 115 இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஆனால் 696 இடங்களில் போட்டியிட்ட பாஜ வெறும் 64 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது என்று தாக்கியுள்ளார். அதேபோல் 452 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் வெறும் 124 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் 31.6 சதவீதம் வாக்குகளையும், இடது சாரிகள் 27.4 சதவீத வாக்குகளையும், பாஜ வெறும் 9.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்