முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரால் உருக்குலைந்துள்ள லிபியாவுக்கு தங்கள் குடிமக்கள் செல்ல இந்தியா தடை விதித்தது

திங்கட்கிழமை, 23 மே 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -  போரால் உருக்குலைந்துள்ள லிபியாவுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்ல இந்தியா தடை விதித்துள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்பு நிலைலமை மோசமாக இருப்பதால் இந்தியா இந்த அறிவுரையை அளித்துள்ளது. இது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று கூறுகையில், இந்தியாவின் இந்த முடிவு அனைத்து குடியேற்ற நிர்வாகத்தினருக்கும் அனுப்பபட்டுள்ளன. லிபியாவில் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. 

அந்த நாட்டில் இந்திய மக்கள் வாழ்வதில் பெரும் அச்சுறுத்தல்களும், சவால்களும் உள்ளன.எனவே அங்கு இந்திய மக்கள் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்த மாதம் 3ம் தேதி முதல் அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.  அரசு படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில்  லிபியாவின் முன்னாள் அமைச்சர்  ஒரு வர்கொல்லப்பட்டார்.

இந்த தகவலை தொடர்ந்து இந்தியா இந்தியா இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முஸ்லீம் நாடான லிபியாவில் அரசு படைகளுக்கும் சிர்தே ஜிகாதி குழுக்களும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு இரு தரப்பினர் இடையேயான மோதல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்