Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பில் திரையுலக பிரபலங்கள்

திங்கட்கிழமை, 23 மே 2016      சினிமா
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் நடிகர்கள் விஷால், நாசர் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.  ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று  நடைபெற்ற இந்த விழாவில் கவர்னர் ரோசய்யா பதவியேற்பும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால், தலைவர் நாசர், சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான சரத்குமார், நடிகை ஆர்த்தி, நடிகர் சுந்தர்ராஜன்,  பிரபல பின்னனி பாடகி பி.சுசிலா, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் , தேவா,  ஆனந்தராஜ்,  ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள்  பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்