முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்

திங்கட்கிழமை, 23 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாளை மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.  சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றதை அடுத்து, 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றார். அவரை தொடர்ந்து 28 அமைச்சர்கள் இரு பிரிவினராக பதவியேற்றனர். இதற்கிடையில் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்களை சேர்க்க முதல்வர் ஜெயலலிதா கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளார். புதிய அமைச்சர்களும் அவர்களின் இலாகாக்கள் ராஜ்பவனில் நேற்று வெளியிடப்பட்டது.

அதன் விபரம் வருமாறு:-

1. ஜி.பாஸ்கரன் (சிவகங்கை) காதி மற்றும் கிராமத்தொழில் வாரிய அமைச்சர். (இந்த துறைகள் ஏற்கனவே அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு வழங்கப்பட்டிருந்தது).
2. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (ஆரணி) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர். தமிழ்ப்பண்பாடு மற்றும் மொழி  (இந்த துறைகள் ஏற்கனவே அமைச்சர் காமராஜிடம் வழங்கப்பட்டிருந்தது).
3. டாக்டர் நிலோபர் கவில் (வாணியம்பாடி) தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இலாகாக்கள் தொழிலாளர், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, ஊரக வேலைவாய்ப்பு. (இந்த துறை ஏற்கனவே அமைச்சர் செல்லூர்கே.ராஜூக்கு அளிக்கப்பட்டிருந்தது).
4, பி.பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்) கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். இத்துறை ஏற்கனவே அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு வழங்கப்பட்டிருந்தது).

மேற்கண்ட அமைச்சர்கள் நாளை (25-ம் தேதி ) மாலை 7 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பார்கள் என்று கவர்னர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்