முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு

திங்கட்கிழமை, 23 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் பொது மக்கள் பார்க்கும்வண்ணம் முதல்முறையாக நேற்று நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 6-வது முறையாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அனைத்து பொதுமக்களும் காணும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுபாட்டின் கீழ்இயங்கும் நவீன மின்னணு திரைவாகனம் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் (தஞ்சை மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் நீங்கலாக) பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நிகழ்ச்சியை முதன் முறையாக செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்