முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாம் மீதான ராணுவ தடை நீக்கம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      உலகம்
Image Unavailable

வியட்நாம் மீதான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார் . சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண் டாடி வருவதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. எனினும் அப்பகுதியில் ராணுவ நிலைகளை சீனா உருவாக்கி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழலில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பகையை மறந்து வியட்நாமுடன் நட்புறவை வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இதற்காக 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தலைநகர் ஹனோயில் அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஒபாமா, ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியட்நாம் மீது விதிக்கப்பட்டிருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. சீனாவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. வியட்நாம் அரசுடன் சுமுகமான உறவு பேண வேண்டும் என்பதற்காக இம்முடிவு எட்டப்பட்டது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயம் தொடங்கப் பட்டுள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago