முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் நடவடிக்கைகள் :வைகோ வரவேற்று பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று முன்தினம் பதவியேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தாலிக்கு ஒரு பவுன் தங்கம், 500 மதுகடைகள் மூடல் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை இதன் மூலம் அவர் நிறைவேற்றியுள்ளார். இதில் சில அம்சங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால் அதே நேரம், விவசாயப் பெருங்குடி மக்கள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசே செலுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் கடன்சுமையை குறைக்க வேண்டும்.

100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என்பதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தற்போதைய முறையை மாற்றி, மாதா மாதம் செலுத்திட அறிவிப்பு வெளியிட்டிருந்தால் சாதாரண, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்